புதுச்சத்திரம் வட்டத்தில் ரூ.1.39 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், ரூ.1.39 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், ரூ.1.39 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாப்பிநாய்கன்பட்டி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, களங்காணி, காரைக்குறிச்சி, தாத்தையங்கார்பட்டி, கண்ணூர்பட்டி, நவணி, லக்காபுரம், கல்யாணி, பாச்சல் மற்றும் ஏ.கே.சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிநீர் கிணறு, சத்துணவு சமையல் கூட கட்டடம், நிழல்கூடம், சாலை மேம்பாடு, மாட்டுக் கொட்டகை, தனிநபர் இல்லக் கழிப்பிடம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுமானம், ஆழ்துளைக் கிணறு, குளம் தூர்வாருதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பணிகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி விரைவாக முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.மாலதி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ஒன்றியப் பொறியாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் அருள், பணி மேற்பார்வையாளர் சுதாகர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com