செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கம்

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல், கட்டடவியல், உயிரியில் தொழில்நுட்பத் துறை சார்பில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல், கட்டடவியல், உயிரியில் தொழில்நுட்பத் துறை சார்பில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
 கருத்தரங்கை செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பொ.செல்வராஜ் தொடக்கி வைத்தார். கல்லூரியின் செயலாளர் கவீத்ரா நந்தினிபாபு, கல்லூரி முதல்வர் ரா.பிரபு, இயந்திரவியல் துறை முதன்மையர் ரா.சசிக்குமார், உயிரியில் தொழில்நுட்பத் துறைத் தலைவர் ந.சர்மிளாதேவி, இயந்திரவியல் துறைத் தலைவர் கோ.செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
 மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் அங்சன்கிட், மஹேந்திரா தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் க.வித்யா, கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரி ச.கோபிநாத், பாவை தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் நகுல் தேவ் ஆகியோர் கருத்தரங்கம் குறித்துப் பேசினர்.
 மஹேந்திரா மற்றும் மஹேந்திரா லிமிடெட் துணை மேலாளர் பி.அர்ஜுன்ராஜ் கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் விவாதிக்கப்பட்டன. கட்டடவியல் துறைத் தலைவர் மா.வளர்மதி நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com