பண்ணைக்காரன்பட்டியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த 200 காளைகளை: உற்சாகத்துடன் பிடித்த வீரர்கள்

பண்ணைக்காரன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 200 காளைகள் பங்கேற்றன. போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடக்கி வைத்தார்.

பண்ணைக்காரன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 200 காளைகள் பங்கேற்றன. போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடக்கி வைத்தார்.
 நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பண்ணைக்காரன்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜியாவுல் ஹக், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசித்துப் போட்டியைத் தொடக்கி வைத்தார்.
 வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை 260 மாடுபிடி வீரர்கள், இளைஞர்களும் போட்டி போட்டுப் பிடித்தனர். திருச்சி, சேலம், நாமக்கல், மற்றும் கரூர் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 209-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்கியவர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசு, சைக்கிள், சில்வர் குடம், சில்வர் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டன. வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில், மாடுபிடி வீரர்கள் 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
 விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சி.மாலதி, நாமக்கல் கோட்டாட்சியர் எம்.ராஜசேகரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் என்.பாலச்சந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சீனிவாசன், ஏடிஎஸ்பி ராமசாமி, டிஎஸ்பிக்கள் பொன்.தாமரைச்செல்வன், ராஜூ, சேந்தமங்கலம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com