நன்செய் இடையாறு மகா மாரியம்மன்: கோயில் தீ மிதித் திருவிழா

பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தீமிதிக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தீ மிதித்தனர்.

பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தீமிதிக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தீ மிதித்தனர்.
 இந்தக் கோயில் பங்குனி மாத தீ மிதித் திருவிழா கடந்த 13-ஆம் தேதி அதிகாலை கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடி கம்பத்துக்கும், மாரியம்மனுக்கும் பால், தீர்த்தங்கள் ஊற்றி மஞ்சள் கயிறு அணிந்து விரதம் இருந்தனர்.
 14-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 26-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
 27-ஆம் தேதி திங்கள்கிழமை மதியம் ஆண், பெண் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு புனித நீராடி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தமிழகத்திலேயே மிக நீளமானதாகக் கூறப்படும் 63 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட அக்னிக் குண்டத்தில் ஆண் பக்தர்கள் வரிசையாக தீமித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இரவு வரை நடைபெற்றது.
 பெண் பக்தர்கள் பூவாரி போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 28-ஆம் தேதி கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அலகு குத்தி வருதல், குழந்தை பேறு பெற்றவர்கள் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையுடன் கோயிலை சுற்றி வந்து நேர்த்தி கடனைச் செலுத்துவர். 29-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்குச் செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
 சிறப்புப் பேருந்து: திருவிழாவையொட்டி அரசு பேருந்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 விழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலர் குழுவினர், விழாக் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com