பரமத்தி வேலூரில் வாகனச் சோதனை 19 வாகனங்களுக்கு அபராதம்

பரமத்தி வேலூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 19 வாகனங்களுக்கு ரூ. 93 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தொகை வசூலிக்கப்பட்டது.

பரமத்தி வேலூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 19 வாகனங்களுக்கு ரூ. 93 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தொகை வசூலிக்கப்பட்டது.
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வாகன சோதனை நடத்தினார். இதில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து, அதிக பாரம் ஏற்றி வந்த லாரி, அனுமதியின்றி அதிக நபர்களை ஏற்றி வந்த தனியார் நிறுவன வாகனங்கள், தமிழக சாலை வரி செலுத்தாமல் தமிழகத்திற்குள் வந்த ரிக் வாகனங்கள் என 19 வாகனங்களை சோதனையில் சிக்கின.
இதையடுத்து வாகன உரிமையாளர்களிடமிருந்து அபராதமாக ரூ. 94 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு அதற்கான சோதனை அறிக்கையும் வழங்கப்பட்டன. மேலும் நகர்புறங்களில் செயல்படும் சிற்றுந்துகள் சரியான வழித்தடத்தில் இயங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com