வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் அஸ்கா சர்க்கரை கலப்பதை தடுக்க வேண்டும்: பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பரமத்தி வேலூர் வட்டம்,ஜேடர்பாளையத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் அஸ்கா

பரமத்தி வேலூர் வட்டம்,ஜேடர்பாளையத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் அஸ்கா சர்க்கரை கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
 பாரதிய ஜனதா கட்சியின் கபிலர்மலை ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ஜேடர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கபிலர்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கரும்பு ஆலைகளில் அஸ்கா சர்க்கரை கலந்து நாட்டுச் சர்க்கரை தயார் செய்யப்பட்டு வருகிறது. இக் கலப்படத்தை பொது சுகாதாரத் துறையினர் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பரமத்தி வேலூர் வட்டத்தில் 24 மணி நேரமும் மதுபானங்களை பதுக்கி வைத்தும், அனுமதியின்றியும் மதுபானங்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.  ஜேடர்பாளையம் பரிசல் துறை பகுதியில் உள்ள குடிநீர் நீரேற்று தொட்டி மூடப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையிலும், ஜேடர்பாளையம் மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதர்களை அகற்றி மின் விளக்குகள் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
கூட்டத்தில் கபிலர்மலை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒன்றிய,நகர மற்றும் கிளைகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com