திருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரிக்கை

திருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக்  கோரி வழக்குரைஞர்கள் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக்  கோரி வழக்குரைஞர்கள் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 4 -ஆவது மாநாடு திருச்செங்கோடு கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் சங்கத்தின் செயல் தலைவர் மூத்த வழக்குரைஞர் வரதராஜூ தலைமையில்  நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பரணீதரன் வரவேற்றார். மாநாட்டினை மாநில பொதுச் செயலாளர் முத்து அமுதநாதன் துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டின் நிறைவாக பறிக்கப்படும் உரிமைகள் என்ற தலைப்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன் கருத்துரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில், திருச்செங்கோட்டுக்குக் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரியும், வழக்குரைஞர்கள் சேமநல நிதியை ரூ. 10 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ. 5ஆயிரம் உதவித் தொகை முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும்.
சட்டம் படித்து முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்த பிறகு வழக்குரைஞர் தொழில் செய்ய தனித் தேர்வு எழுத வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கிட வேண்டும்.
தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். தென் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் கிளை உடனே அமைக்கப்பட வேண்டும். நீதித்துறையில் காலியாக உள்ள நீதிபதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியிடங்களை உடனே பூர்த்தி செய்திட வேண்டும் என மாநாட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com