மல்லசமுத்திரத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ. 88.48  லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ. 88.48  லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டபாளையம், பருத்திபள்ளி, இராமபுரம், அவிநாசிப்பட்டி, மல்லசமுத்திரம் மேல்முகம், கருமனூர், செண்பகாமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டார்.
மேலும் மல்லசமுத்திரம்
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திபள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2.11 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீருற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், இதே திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் மற்றும் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 8.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்;டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும், அவிநாசிப்பட்டி ஊராட்சியில் தாய்த்திட்டத்தின் கீழ் ரூ.25.94 லட்சம் மதிப்பீட்டில் மோர்ப்பாளையம் - எலச்சிபாளையம் சாலை முதல் வேலனம்பாளையம் அருந்ததியர் காலனி வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினையும், ராமபுரம் ஊராட்சி பகுதியில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 12,000 மானியத்துடன் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பிட பணியினையும், இதே பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் முருகேசன் என்பவர் கட்டி வரும் புதிய குடியிருப்பு வீடு கட்டுமான பணியினையும் மற்றும் தாய் ஐஐ-திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றையும், கருமனூர் ஊராட்சி, கவுண்டம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 1,00,000 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வரும் பணி உட்பட மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ. 88.48 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்துப் பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி விரைவாகவும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.அண்ணாமலை, புஷ்பராஜன், உதவி பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி உட்பட மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com