டெங்கு தடுப்பு மருத்துவ முகாம்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தலைமை வகித்தார். கபிலர்மலை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம், கபிலர்மலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரங்கசாமி, சுகாதார துறை ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
நாமக்கல்லில்... சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் ப.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  மருத்துவர் வெங்கடேஷ்குமார், டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் குறித்து பேசினார்.
திருச்செங்கோட்டில்... திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை டெங்கு கொசு ஒழிப்பு தினம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி,  வருவாய்க் கோட்டாச்சியர் பாஸ்கரன், நகரமைப்பு அலுவலர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 மருத்துவர்கள் தேன்மொழி, அருள்குகன்  ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை விளக்கினர். நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் நிருபன், முருகன், ஜான்ராஜா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராசிபுரத்தில்... ராசிபுரம் நகராட்சி சார்பில் ஆணையாளர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கொசு புழு தடுப்புப் பணி, கொசு அழித்தல், புகை மருந்து அடித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
இதே போல் நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு மாணவர் விடுதி, பத்திர பதிவு அலுவலகம் ஆகிய இடங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட  பூச்சியியல் துறை வல்லுநர் முனுசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கு. பாரதி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் அரசு தலைமை மருத்துவமனை -எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து டெங்கு நோய்த்  தடுப்பு தின நிகழ்ச்சியை நடத்தியது. வடுகம் ஆரம்ப சுகாதார நிலையம், சௌதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com