மழையால் திருமணி முத்தாறு பாலம் சேதம்

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் சப்பையாபுரம் பகுதியில் திருமணி முத்தாற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தாற்காலிக மணல் பாலம் மழைநீர் வெள்ளத்தால்

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் சப்பையாபுரம் பகுதியில் திருமணி முத்தாற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தாற்காலிக மணல் பாலம் மழைநீர் வெள்ளத்தால் கரைந்து போனதால், அப் பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
நாமக்கல் - சேலம் மாவட்டங்களை இணைக்கும் திருமணி முத்தாற்றின் குறுக்கே பல லட்சம் ரூபாய்  மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதனால்  வெண்ணந்தூர் சப்பையாபுரம், ஆட்டையாம்பட்டி பகுதியை இணைக்கும் இந்த பாலத்திற்கு பதிலாக ஆற்றின் குறுக்கே மண்ணைக் கொட்டி  தாற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில்,  அப்பகுதியில்  புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் மீண்டும் மண் சரிந்து பாலம் நீரில் கரைந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது.  பொதுமக்கள், அலுவலகம் செல்வோர், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து வாகனங்கள் பல கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு சென்றன. பொதுப்பணி துறையினர் அந்தப் பாலத்தை மணல் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இப் பகுதியில் தொடர்ந்து அடிக்கடி இது மாதிரி சேதம் ஏற்பட்டு போக்குவரத்துப்  பாதிக்கப்படுவதால், பொதுமக்கள், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, அந்தப் பகுதியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் நிரந்தர பாலம் அமைக்கும் பணியைத் துரிதபடுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com