மாறுகண் குறைபாடு: 8 வயதுக்குள் அறுவை சிகிச்சை அவசியம்

மாறுகண் குறைபாடு இருந்தால், பார்வை குறைபாடு இருக்கும். 8 வயதுக்குள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மட்டுமே பார்வை குறைபாட்டை

மாறுகண் குறைபாடு இருந்தால், பார்வை குறைபாடு இருக்கும். 8 வயதுக்குள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மட்டுமே பார்வை குறைபாட்டை முழுமையாக தடுக்க முடியும் என்றார் கண் மருத்துவர் பெ.ரங்கநாதன்.
உடனடியாக கண் பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் 15 வயதுக்குள் சரி செய்து கொண்டால்தான் பார்வையை திரும்ப பெற முடியும். நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில்  
கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கண்களை காப்போம் என்ற விழிப்புணர்வு கூட்டம் உதவி தலைமை ஆசிரியர் மகேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் மருத்துவர் பெ.ரங்கநாதன் பேசியது:
மாணவர்கள் ஒவ்வொருவரும் வகுப்பறை கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒரு கண்ணை கையால் மூடிக் கொண்டு, ஒரு கண்ணால் கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை படித்துப் பாருங்கள். இதேபோல் அடுத்த கண்ணையும் பரிசோதனை செய்து பாருங்கள்.
 கரும்பலகையில் உள்ள எழுத்துகளை படிக்க முடியவில்லை என்றால் கண்ணில் பார்வை குறைபாடு இருக்கலாம்.
இந்தக் குறைபாட்டினை அறிந்தால் ஆசிரியர் மற்றும் பெற்றோர் உதவியுடன் கண் மருத்துவரை அணுகி பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம்.
மேலும் மாறுகண் இருந்தால், பார்வை குறைபாடு இருக்கும். உடனடியாக கண் பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் 15 வயதுக்குள் சரி செய்து கொண்டால்தான் பார்வை திரும்ப பெற முடியும் .
 மாறுகண்ணை 8 வயதுக்குள் சரிசெய்தால் மட்டுமே 100 சதவீதம் முழுபார்வையை  அளிக்க முடியும். 8 முதல் 15 வயது வரை மாறுகண்  அறுவை சிகிச்சை செய்தாலும் 75 சதவீதம் பார்வையை மட்டும் பெற முடியும். மாறு கண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் மாறுகண் ராசி என்று மூட நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோர்களை ஆசிரியர்கள் அழைத்துப் பேசி அவர்களை கண் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றார்.
ஒளிவிழி பரிசோதகர் பழனி,  சமூக ஆர்வலர் ஜே.பி.சசி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com