விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி - 2017 வியாழக்கிழமை அக் கல்வி நிறுவன வளாகத்தில்

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி - 2017 வியாழக்கிழமை அக் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி, அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணவேணி கருணாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இயக்குநர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, நிவேதனா கிருபாநிதி, பேபி நிதிவர்ஷிகா, நிர்வாக அதிகாரி சொக்கலிங்கம், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் அருளரசு ஆகியோர் கண்காட்சியைத் துவக்கி வைத்தனர்.
 நாமக்கல் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் திரு. அருளரசு தனது சிறப்புரையில், " மாணவர்கள் கேள்வி கேட்கும் மனப்பான்மை மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். பேச்சுக் கலை மற்றும் தலைமைப் பண்புகளை கற்றுத் தேற வேண்டும். எல்லா துறைகளிலும் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும். பல்வேறு கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி அதை மேலும் மேம்படுத்த வேண்டும், மாணவர்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்க்க வேண்டும். பல அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, மாபெரும் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் " என்று கூறினார்.
 விருந்தினராக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இக் கண்காட்சியில் 750 ஆராய்ச்சி திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் +1, +2 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com