நாமக்கல் அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரெட் ரிப்பன் சங்கத்தின் சார்பில் வாழ்க்கையின் வெற்றிக்கான அவசியத் திறன்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரெட் ரிப்பன் சங்கத்தின் சார்பில் வாழ்க்கையின் வெற்றிக்கான அவசியத் திறன்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை கல்லூரி முதல்வர் அ.லீலா குளோரிபாய் குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்தார்.  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார்.
எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்து அலுவலர் பூபதிராஜா டெங்கு காய்ச்சல் தடுக்கும் முறைகள் குறித்தும்,  அண்ணாமலை பல்கலைக்கழக ஆங்கிலத் துறைப் பேராசிரியர் அய்யப்பராஜா ஆங்கில மொழியை ஆளுமைப்படுத்துதல்,  தலைமைப் பண்பு திறன் வளர்த்தல் மற்றும் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறன் குறித்தும்,  கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நாட்டின் வளர்ச்சியில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் பேசினர். இக் கருத்தரங்கில்100-க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர்.  கல்லூரி தாவரவியல் துறைத் தலைவைர் வசந்தாமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com