ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள கட்டடங்கள் மறு அளவை பணி

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள கட்டடங்கள்,  குடியிருப்பு வீடுகள் போன்றவற்றை மறு அளவை செய்யும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ளது.  இதற்கான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள கட்டடங்கள்,  குடியிருப்பு வீடுகள் போன்றவற்றை மறு அளவை செய்யும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ளது.  இதற்கான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
 ராசிபுரம் நகராட்சி 27 வார்டுகளைக் கொண்டது.  இதில் குடியிருப்பு வீடுகள்,  வணிக நிறுவனங்கள் என 17 ஆயிரம் வரி விதிப்பு கட்டடங்கள் உள்ளன. இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரி விதிக்கப்பட்ட கட்டடங்களும் அடங்கும்.  மிகக் குறைந்த வ ரிவிதிப்பு கட்டடங்களை கண்டறிந்து கூடுதல் வரி விதிப்புக்காக இந்த அளவை பணி துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும்,  ஒரு குடியிருப்புக்கு வரி விதிப்பு செய்து,  நாளடைவில் பல்வேறு குடியிருப்புகளாக மாறியுள்ள கட்டடங்கள் குறித்தும் கணக்கிடும் பணியும் நடந்துவருவதாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் உள்ள கட்டடங்கள் மறு அளவை செய்திட  அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து,  ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளிலும் உள்ள கட்டடங்களை அளவை செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கென 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த குழுவினர் மண்டல வாரிய குழுவிற்கு நாளொன்றுக்கு 50 கட்டடங்கள் வீதம் மறு அளவை நடத்தி வருகின்றனர்.  இந்த அளவை பணி நவம்பருக்குள் முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை வழங்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com