இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: ஒரு லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு

நாமக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

நாமக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
முக்கிய சாலைகளில் கட்சிக் கொடிகள், தோரணங்கள், எம்.ஜி.ஆர்.பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாமக்கல் அருகே கருப்பட்டிப்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு விழா நடைபெறும் கருப்பட்டிப்பாளையம் பகுதியில் கோட்டை வடிவில் முகப்பு அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விரிவான காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் கட்சிக் கொடிகள், தோரணங்கள், எம்.ஜி.ஆர்.பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழா முன்னேற்பாடுப் பணிகளை, மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா உள்ளிட்டோர் விழா நடைபெறும் வளாகத்துக்குச் சென்று பார்வையிட்டனர். மைதானத்தில் பயனாளிகள் அமரும் இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து முடிக்க அறிவுறுத்தினர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
விழாவில் மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை திறந்து வைத்து ரூ. 382.94 கோடி மதிப்பிலான 32 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.332.25 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 29,039 பயனாளிகளுக்கு ரூ.188.01 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்.
விழா முன்னேற்பாடுப் பணிகளை ஆய்வு செய்யும் நிகழ்ச்சியில், நாமக்கல் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள், அனைத்துத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com