குடிநீர் தேவையை சமாளிக்க காவிரியில் தடுப்பணை: பாஜக கோரிக்கை

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டம் மோகனூர் அருகே அணியாபுரத்தில் மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பாஜக மாநிலச் செயலர் சுரேந்திரரெட்டி, மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச் செயலர் வடிவேல், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கோரிக்கை குறித்துப் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த 2006-இல் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். நாட்டு சோளம் அதிக விலைக்கு விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை சோளம் வழங்க வேண்டும்.
ஆண்டகளூர்கேட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, பொது சுகாதார கழிப்பிட வசதி அமைக்க வேண்டும். காவிரி ஆற்றில் மணல் எடுப்பதை தாற்காலிகமாக நிறுத்த வேண்டும். நாமக்கல் மாவட்ட குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றில் களிமேடு-தவிட்டுப்பாளையம் மற்றும் கொந்தளம்-நொய்யல் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். பரமத்திவேலூர் இடும்பன் குளத்தைத் தூர்வாரி, காவிரி ஆற்றிலிருந்து உபரி நீரை, மின் மோட்டார் பயன்படுத்தி, குளத்தில் நிரப்ப வேண்டும். நாமக்கல்-திருச்சி சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த நிதி அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com