தரமான விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்குப் பயிற்சி

வெண்ணந்தூர் வட்டாரம், மூலக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதைகள் உற்பத்தி செய்வது குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

வெண்ணந்தூர் வட்டாரம், மூலக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதைகள் உற்பத்தி செய்வது குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கு. சுந்தரவடிவேல், பயிற்சியில் கலந்து கொண்ட விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தியின் நோக்கம், உணவு உற்பத்தியில் விதைகளின் முக்கியத்துவம், பயிர் காப்பீடு திட்ட நன்மைகள் குறித்து விளக்கமளித்தார்.
திருச்செங்கோடு விதை சான்றளிப்புத் துறையின் விதை சான்றளிப்பு அலுவலர் ஜெயக்குமார், விதை உற்பத்தியில் மண் பரிசோதனையின் மூலம் பயிர்த் தேர்வு, விதைத் தேர்வு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.
வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் மா. சௌந்தர்ராஜன், மத்திய, மாநிலத் திட்டங்களின் மானியங்கள் குறித்துப் பேசினார். வெண்ணந்தூர் வட்டார உதவி விதை அலுவலர் ரத்தினவேல் விதைப்பண்ணை அமைப்பு, விதை சான்றிதழ் விவரம் குறித்துப் பேசினார். துணை வேளாண்மை அலுவலர் பழனிவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆரோக்கியசாமி, கருப்புசாமி, அந்தோணிசாமி, திருநாவுக்கரசு, பழனிசாமி ஆகியோர் உயிர் உர விதை நேர்த்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
பயிற்சியில் விவசாயிகள் கணபதி, கருப்பண்ணன், சாந்தி ஆகியோர் விதை பங்கேற்று விதை உற்பத்தியில் தங்களது விதை பண்ணை அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர். பயிற்சியில் அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மா. ரமேஷ், கவிசங்கர் ஆகியோர் நன்றி கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com