பரமத்தி பகுதியில் நாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தி பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கடித்த தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யவும்,தடுப்பூசிகள் போட வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தி பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கடித்த தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யவும்,தடுப்பூசிகள் போட வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட மாவுரெட்டி, ஓவியம்பாளையம், கீழக்கடை, தேவிபாளையம், சாணிப்பட்டி மற்றும் மாதேசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் ஆடு,மாடு வளர்ப்பையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மேய்த்து வருகின்றனர். திருமணிமுத்தாறு சாலைகளின் ஓரத்தில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள், கோழிக்கழிவுகளால் அந்தப் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 நாய்கள் கூட்டமாக சேர்ந்து மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை கடித்தும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாய்கள் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளதாகவும், தெரு நாய்களை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் அல்லது தெரு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்ய வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com