ராசிபுரம்: கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா

ராசிபுரம் வித்யாஸ்ரம் பள்ளிகள் சார்பில் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

ராசிபுரம் வித்யாஸ்ரம் பள்ளிகள் சார்பில் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளிகளின் கல்வி ஒருங்கிணைப்பாளர் இ.ஜெ.கவிதா வரவேற்றார். பள்ளி மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதை நடந்தன.   பள்ளிகளின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். மாணவ மாணவியர்கள் இன்றைய நாள் மட்டுமில்லாமல், என்னாளும் சுதந்திர போராட்ட தியாகிகளின் போராட்டங்களை நினைவில் கொள்ளவதுடன், சமதாய மாற்றத்திற்கும் வித்திடவேண்டும் என்றார். மேலும்  விடுதலைக்கு போராடிய தியாகிகளை நினைவூட்டும் வகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் மாணவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் என்.பழனிவேல்,  தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர்கள்  (சேர்க்கை) கே.செந்தில், (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, பள்ளிகளின் இயக்குநர் சி.சதீஷ், துணை முதல்வர் எஸ்.ரோஹித், சேலம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தலைமை ஆசிரியை ஷகிலா பானு உள்ளிட்டோர், பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் நிரஞ்சனி கலந்து கொண்டனர்.  பாவை பொறியியல் கல்லூரிகள் சார்பிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்ஆர்வி சிபிஎஸ்சி பள்ளிகள் சார்பில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைவர் டாக்டர் இ.தங்கவேல் தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.  பள்ளிச் செயலர் ஆர்.மனோகரன், பொருளாளர் பி.வஜ்ரவேல், நிர்வாக அறங்காவலர் ஆர்.துரைசாமி, அறக்கட்டளை பொருளாளர் கே.என்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கிப் பேசினர். 
முத்தாயம்மாள்  பொறியியல் கல்லூரிகள் சார்பில் நடைபெற்ற விழாவில், அறக்கட்டளை தலைவர் ஆர்.கந்தசாமி தலைமை வகித்து கொடியேற்றினார். முதல்வர்கள் எஸ்.நிர்மலா, ப.வேணுகோபால், அறக்கட்டளை துணைச்செயலர் கு.ராகுல் உள்ளிட்டபலர் பங்கேற்றனர். 
மசக்களிப்பட்டி மகரிஷி வித்யாமந்திர் பள்ளி சார்பில் நடந்த விழாவில், முதல்வர் எம்.ஷோபா வரவேற்றார். பள்ளித் தலைவர் க.சிதம்பரம், இயக்குநர் பி.சுப்பிரமணியன், புலவர் பெ.பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.  
ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளிகள் சார்பில் நடந்த சுதந்திர தினவிழா, பாரதமாதா பூமிபூஜை, ரக்ஷாபந்தன் விழாவில் பள்ளிகளின் தலைவர் கே.குமாரசாமி தலைமை வகித்தார். செயலர் எஸ்.சந்திரசேகர் வரவேற்றார். சேலம் ஸ்ரீவித்யாமந்திரி பள்ளிகளின் செயலர் கே.என்.லட்சுமணன் பங்கேற்றுப் பேசினார்.  ரக்ஷாபந்தன் விழாவில் மாநில ஆர்.எஸ்.எஸ். செயலர் வி.ஜி.ஜெகதீசன், ஊர்வலம், குழு நடனங்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், நிர்வாகிகள் எம்.ராமகிருஷ்ணன், வி.சி.சேகர், சுந்தரராஜூ,  ஆர்.பெத்தண்ணன், எஸ்.கே.முருகேசன், வி.ராமதாஸ், வி.ராமசாமி, சி.நடராஜூ, தலைமையாசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
சீராப்பள்ளி அருகேயுள்ள சின்ன காக்காவேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைமையாசிரியர் மோ.ராணி வரவேற்றார். பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் செ.பூபதி தேசிய கொடியேற்றி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பேசினார்.  ஆசிரியர் விஜயகுமார் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 
ஞானோதயா சிபிஎஸ்இ பள்ளி சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைவர் ஆர்.அரங்கண்ணல் தலைமை வகித்தார். தாளாளர் ப.மாலாலீனா துவக்கி வைத்தார். இயக்குநர் உஷா நடராஜன், ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.  சிறப்பு விருந்தினராக கிராண்ட் மாஸ்டர் மலேசியா ஹன்சி.சோகே.சர்.கே.அனந்தன் பங்கேற்று பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 
குருசாமிபாளையம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைவர் என்.வி.நாகேந்திரன் கொடியேற்றிப் பேசினார். செயலர் சத்தியநாதன், தாளாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மனோகரன், முதல்வர் தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்றனர். தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டி, பரதநாட்டியம், ரங்கோலி, தாண்டியா நடனம் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. 
எஸ்.வி.பி. மாடர்ன் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைவர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் எஸ்.கதிரேசன், தாளாளர் எஸ்.லாவண்யா, முதல்வர் எஸ்.தனிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் வி.எஸ்.இளங்குமரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
வித்யாநிகேதன் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிச் செயலர் சி.சுந்தரராஜன் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.  பள்ளி முதல்வர் பி.ஸ்ரீபிரவீணா வரவேற்றார். பொருளாளர் ஆர்.கணேசன், இயக்குநர்கள் பி.சீனிவாசன், எம்.செல்வராஜூ, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆண்டகளூர்கேட் ஸ்ரீவெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆர்.கவுண்டம்பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளி, லக்கபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, கோகா, கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இதில் ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சிவக்குமார்,  செயலர் எஸ்.முரளி, நிர்வாகிகள் கருணாகர பன்னீர் செல்வம், கே.சிட்டி, கே.குணசேகர், ஆர்.ரவி, சுரேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
பாரதிய ஜனதா கட்சி சார்பில் 18-வது வார்டில் நடந்த நிகழ்வில், கட்சியின் மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் ஆர்.கே.மூர்த்தி தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நகர பி.ஜே.பி., தலைவர் மணிகண்டன், மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் வி.சேதுராமன், வழக்கறிஞர் கார்த்திகேயன், ஆர்.யு.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com