"30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை அவசியம்'

முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர் பெ. ரங்கநாதன் அறிவுறுத்தினார்.

முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர் பெ. ரங்கநாதன் அறிவுறுத்தினார்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் கிளை சார்பில் நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே பெரியசோளிபாளையம் அருந்ததியர் காலனியில் உலக புற்றுநோய் மாத விழிப்புணர்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சமூக ஆர்வலர்கள் சசி, யுவராஜ், பெரியசோளிபாளையம் குமார், ராமசாமி, வீரன் முன்னிலை வகித்தனர். முகாமுக்குத் தலைமை வகித்த அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.ரங்கநாதன் பேசியது:
நாட்டில் புற்றுநோயினால் மக்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் கர்ப்ப பை மற்றும் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பெண்கள் புற்றுநோய் முற்றிப் போன கடைசி  நிலையில் மருத்துவரை அணுகுவதுதான். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்ப பை புற்றுநோய் இருக்கிறதா? எனக் கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இளைஞர்களிடம் புகையிலைப் பொருள் பழக்கம் அதிகம் காணப்படுகிறது. இதனால் இளைஞர்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வாயில் வலிக்காத ஆறாத புண் இருந்தால் உடனடியாக உங்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி, புண் பகுதியில் உள்ள சதையை எடுத்துப் பார்த்து புற்றுநோய் இருக்கிறதா? என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
பெரியசோளிபாளையம் அருந்ததியர் காலனியில் மக்கள் புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com