ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி விழா

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் நந்திக்கு பிரதோஷ வழிபாடும், 37-ஆம் ஆண்டு சிவராத்திரி விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் நந்திக்கு பிரதோஷ வழிபாடும், 37-ஆம் ஆண்டு சிவராத்திரி விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
முன்னதாக ஆலய முகப்பில் உள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நந்தி பகவான வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பின்னர் சிவராத்திரியைத் தொடர்ந்து கோயிலில் கலசபூஜை, மகன் யாசம் ஆறுகால அபிஷேக ஆராதனை,  சமய சொற்பொழிவு, இன்னிசை வழிபாடு, 108 நடை பிரதட்சணம் போன்றவையும், ஸ்ரீ கைலாசநாதருக்கு பல்வேறு அபிஷேகங்களும் நடைபெற்றன.  அதிகாலை வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு அருகேயுள்ள இராஜலிங்கம்பேட்டையில் அருள்மிகு சதாலிங்க சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தக் குடம் எடுத்து பள்ளியபாளையம் ஆற்றங்கரையில் இருந்து நடைப்பயணமாக வந்தனர்.
ஸ்படிக விநாயகருக்கும், மரகத லிங்கத்துக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சதாலிங்க சுவாமிக்கு மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இரவு நாலுகால பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் நடைபெறும் என நிர்வாகிகள் முருகேசன், ஜோதி,கோபாலகிருஷ்ணன், கண்ணன், ஆகியோர் தெரிவித்தனர். மாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பூஜையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com