"திறமையை வளர்த்துக் கொண்டால் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை ஊதியம் பெறலாம்' 

கல்லூரி கல்வியோடு திறமைகளை வளர்த்துக் கொண்டால் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை ஊதியம் தருவதற்கு பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன எனக் கல்லூரி விழாவில் தெரிவிக்கப்பட்டது. 

கல்லூரி கல்வியோடு திறமைகளை வளர்த்துக் கொண்டால் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை ஊதியம் தருவதற்கு பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன எனக் கல்லூரி விழாவில் தெரிவிக்கப்பட்டது.
 நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பிசினஸ் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் ஈக்கோனக்ஸ்-2018 எனும் கலை விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன் தலைமை வகித்தார். முதுகலை கணினி பயன்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மேலாண்மைத் துறைத் தலைவர் ஆர்.விமல் நிஷாந்த், 5 ஆண்டு மேலாண்மைத் துறைத் தலைவர் குருமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 கல்லூரி முதல்வர் ஆர். அமுதன் விழா நோக்கம் குறித்துப் பேசினார்.
 சிறப்பு விருந்தினராக சென்னை லேன் சிக்ஸ் சிக்மா இண்டலிஜன்ட் குவாலிட்டி நிறுவன முதன்மை ஆலோசகர் ஜி. சிவக்குமார் பேசியது:
 படித்து முடித்த பின் வேலைக்குச் செல்ல தகுதி, திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றுக்கொள்வதை உயர் தரத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பட்டதாரிகள் தங்கள் தகுதிகளையும், திறன்களையும் வளர்த்துக் கொள்வதில்லை என்ற குறைபாடு இருக்கிறது.
 எனவே, சவால்களை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். கல்லூரி கல்வியோடு, திறமைகளை வளர்த்துக் கொண்டால் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை ஊதியம் தருவதற்கு பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன.
 இவற்றுக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
 இதில் மாணவ, மாணவிகளுக்கான விளம்பரம் உருவாக்குதல், வணிக விநாடி வினா, குழு நடனம், குறு நாடகம், சிறந்த மேலாளர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
 மாலையில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தருமபுரி லட்சுமி நாராயணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். குமரேசன் பங்கேற்றுப் பரிசுகள் வழங்கினார்.
 இந்தப் போட்டிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கரூர், கடலூர், விழுப்புரம், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு கலை, அறிவியல் கல்லூரிகளின் மாணவ,மாணவிகள் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் சி. தியானேஸ்வரன், எம்.ஏ.முகம்மது முஸ்தபா, எம்.கே. நாகேஸ்வரன் மற்றும் மாணவ,மாணவிகள் செய்திருந்தனர்.
 பிசினஸ் கல்லூரி முதுகலை கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் பி.எஸ்.வேலுமணி நன்றி கூறினார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com