மாவட்ட அளவிலான செஸ் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட செஸ் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இப் போட்டிகளை தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமை வகித்து

நாமக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட செஸ் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இப் போட்டிகளை தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 27 பேர் சர்வதேச தரப் புள்ளிகள் பெற்றவர்கள். நாமக்கல் மாவட்டத்திலிருந்து தேசிய அளவில் வெற்றி பெற்ற சிபி விஷால், சுபாஷ் மதிவாணன், வேல் விஸ்வநாதன் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டிகள் 9 வயது, 11, 13,15 வயது மற்றும் பொதுப்பிரிவு என்று 5 பிரிவுகளாக நடந்தன. போட்டிகள் 6 சுற்றுக்களாக நடந்தன. 9 வயது மாணவர் பிரிவில் நந்தேஸ், பாரத், ஹஸ்வந்குமார், மாணவிகள் பிரிவில் தீட்க்சா, பிரதீக்ஷô, ரிதன்யா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். 11 வயது மாணவர் பிரிவில் யதுநந்தன், சந்தர்,கிஷோர்ராகவ், மாணவிகள் பிரிவில் பூமிகா, ரஸ்மிகா, மதிவதனி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். 13 வயதுடையோர் பிரிவில் மாணவர்கள் யோகப்பிரியன், கார்த்திக் குகன், விக்னேஷ், மாணவிகள் பிரிவில் ரக்ஷிதா, விஷ்ணுபிரியா, கோபிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் வந்தனர். 15 வயது மாணவர் பிரிவில் வேல் விஸ்வநாதன், சூரியபாரதி, பூபேஷ் மாணவிகள் பிரிவில் அபிசுகா, மகிமா, கனிஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். அனைத்து பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற 2 பேர் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பொதுப் பிரிவில் முதல் 4 இடங்களை முறையே சிபிவிஷால், தர்ஷன், பழனிசாமி, செல்வம் ஆகியோர் பெற்றனர். இவர்களும் மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பரிசுகளை தலைவர் டாக்டர் ரமேஷ், செயலாளர் ஞானசேகரன், ஆதாயம, சிவம் ஆகியோர் வழங்கினர். தேவேந்திரன் தலைமை நடுவராக விளங்கினார். நடுவர்களாக சிவராமகிருஷ்ணன்,சீனிவாசன், சரண்யா, அழகம்மை, கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com