விவசாயிகள் தற்கொலை சமூகத்துக்கு அவமானம்: உ.சகாயம்

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், மாரடைப்பால் மாண்டு போவதும் சமூகத்துக்கு அவமானம் என்றார் சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் உ.சகாயம்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், மாரடைப்பால் மாண்டு போவதும் சமூகத்துக்கு அவமானம் என்றார் சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் உ.சகாயம்.
நாமக்கல் அருகே லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்து உ.சகாயம் பேசியது:-
விவசாயிகள்தான் நம்முடைய வாழ்க்கையின் அடித்தளமாக, ஆதாரமாக உள்ளனர். அவர்கள் வாழ்ந்தால்தான், நாம் வாழ முடியும். ஆனால், விவசாயிகளின் வாழ்க்கையில் வறுமையும், வெறுமையும் நிறைந்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், மாரடைப்பால் மாண்டு போவதும், சமூகத்துக்கு அவமானம்.
1,000 ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் இருந்த ஒரே சாம்ராஜ்யம் சோழப் பேரரசு என அமெரிக்க பத்திரிக்கை கூறுகிறது. நாம் வரலாற்று உண்மைகளை தெரிந்திருக்கவில்லை. நம் மொழி மீது நமக்கு நம்பிக்கை, பற்றுதல் இல்லை. வாழ்க்கைக்காக ஒரு மொழி இருக்கிறது என்று சொன்னால் அது தமிழ்மொழி தான் என்றார்.
விழாவை முன்னிட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் 30 விவசாயிகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். நம்பிக்கை இல்ல நிர்வாகி கதிர்செல்வன், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சு.பழனியாண்டி, தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com