தண்ணீர் டேங்கர் லாரி சிறைப்பிடிப்பு

தனியார் நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 20-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகக் கூறி, டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

தனியார் நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 20-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகக் கூறி, டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
 மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் பயன்பாட்டுக்காக 500 கனஅடி நீர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் வரும் குடிநீரையையும் நீரேற்று பாசனம் மூலம் சிலர் தண்ணீர் எடுப்பதால் முழுமையாக குடிநீர் கடைமடைவரை வந்து சேருவதில்லை. இதோடு, ராஜா வாய்க்காலிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
 இந்த நிலையில், பரமத்தி வேலூர், சோழசிராமணி,ஜேடர்பாளையம்,பாண்டமங்கலம்,பொத்தனூர், கரையாம்புதூர், புதுரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் காகித ஆலைகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதால் விளைநிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
 இந்தச் சூழ்நிலையில், எஸ்.வாழவந்தி குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தினசரி 20-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறி, தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப்பிடித்தனர். தகவலறிந்த வட்டாட்சியர் ருக்குமணி, கிராம நிர்வாக அலுவலர் கல்பனா உள்ளிட்டோர் அங்கு சென்று, போராட்டம் நடத்தியவர்களிடம் சமரசம் செய்தனர்.
 இதையடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் ருக்குமணி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com