உலக வன நாள் பேச்சுப்போட்டி: 100 மாணவர்கள் பங்கேற்பு

உலக வன நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர்.

உலக வன நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் மார்ச் 21- ஆம் தேதி உலக வன நாள் விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில் நாமக்கல் வனக் கோட்டத்தின் சார்பில் உலக வனநாள் விழா நாமக்கல்லில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட வன அலுவலர் ரா. காஞ்சனா தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி தமிழ், ஆங்கில வழியில் நடைபெற்றது. அதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். முன்னதாக நாமக்கல் வனச்சரகம் அலுவலகம் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com