எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அசோலா -கால்நடை தீவன தொழில்நுட்பப் பயிற்சி

அட்மா திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக அசோலா - கால்நடை தீவனமாக உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி மோளியப்பள்ளி ஊராட்சி நல்லிபாளையம்  கிராமத்தில் புதன்கிழமை

அட்மா திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக அசோலா - கால்நடை தீவனமாக உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி மோளியப்பள்ளி ஊராட்சி நல்லிபாளையம்  கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
  இப் பயிற்சியை கால்நடை உதவி மருத்துவர் குமாரசாமி  துவக்கி வைத்து, அசோலா உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தார். மேலும் அசோலா தீவன உற்பத்திக்கு கூடுதலாக நிலமோ அல்லது நீர்ப் பாசனமோ தேவையில்லை என்பது பற்றியும் நிலமில்லா விவசாயிகளும் அசோலா உற்பத்தி செய்வதன் மூலம் பசுந்தீவனம் வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு அளிக்க முடியும் என்பதையும் விளக்கினார்.
அசோலா உற்பத்தி செய்வதன் மூலம் கால்நடைகளுக்கு ஆகும் தீவன செலவு குறைவதுடன், கால்நடைகளின் பால் உற்பத்தி திறன், இறைச்சி உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன் அதிகரிப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் இருமடங்காக உயர கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
    எலச்சிபாளையம் கால்நடை உதவி மருத்துவர் பாலாஜி, அசோலா கால்நடைகளுக்கு எந்த முறையில் அளிக்க வேண்டும் என்பது குறித்து கூறினார். உஞ்சனை கால்நடை உதவி மருத்துவர் தட்சிணாமூர்த்தி அசோலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் தேவைகள் பற்றி விளக்கினார். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
எலச்சிபாளையம் வேளாண் உதவி இயக்குநர் (பொ)  சத்தியபிரகாஷ் வேளாண்மை துறையில் மூலம் செயல்படுத்தப்படும் 2018-19 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடு பற்றி கூறினார். பயிற்சியின் இறுதியில் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருபா நன்றி கூறினார்.
இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா, செல்வகண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com