தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துஅனைத்து பொதுநல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து குமாரபாளையத்தில் அனைத்து பொதுநல அமைப்புகள் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து குமாரபாளையத்தில் அனைத்து பொதுநல அமைப்புகள் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்தும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய, மாநில அரசுகள் ஆலையை மூட உத்தரவிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திராவிடர் கழக நகரத் தலைவர் சரவணன், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் சமர்பா குமரன், பகலவன், கலைமணி, புவனேஸ்வரன், செல்வராஜ், அறிவொளி சரவணன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர்ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோன்று, குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டுவலசு பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலர் பாலேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், கேசவன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளை எதிராக முழக்கம் எழுப்பினர்.
திருச்செங்கோட்டில் ... திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு  மார்கிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் ராயப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில்  ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுத்தியும், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். துப்பாக்கிச்  சூட்டில் பலியான 11 பேருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் போன்ற முழக்கங்களை  எழுப்பினர்.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன் கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றிய செயலர் ஆர்.வேலாயுதம், நகரக் குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்,  எஸ்.சேகரன், இயற்கை வேளாண்மை ஆர்வலர் ஜெயபாரதி, வாலிபர்சங்கத் தலைவர் ஜி.கோபி ஆகியோர் உரையாற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com