பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் இணைய வேளாண் துறை அறிவுறுத்தல்

திருச்செங்கோடு வட்டாரத்தில் நடப்பு சம்பா (நெல்-ஐஐ) பருவத்திற்கு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம்  செயல்பாட்டில் உள்ளது.

திருச்செங்கோடு வட்டாரத்தில் நடப்பு சம்பா (நெல்-ஐஐ) பருவத்திற்கு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம்  செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நெல் பயிரை விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம் என திருச்செங்கோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ஜெயமணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 
திருச்செங்கோடு வட்டத்துக்குள்பட்ட ஏ. இறையமங்கலம், எஸ். இறையமங்கலம், சிக்கநாய்க்கன்பாளையம், பிரிதி ஆகிய கிராமப் பகுதிகளில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ. 29 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 435 ஆகும்.
இதை விவசாயிகள் வரும் நவம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும்.
திட்டத்தில் இணைய நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கான தகுதிகள்: அனைத்து விவசாயிகள் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் மற்றும் வேளாண்மை நகைகடன் பெறும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் கட்டாயமாக சேர்க்கப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் தாமாக முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய ஆவணங்களுடன் காப்பீடு கட்டணத்தை செலுத்தலாம். 
 ஆவணங்கள் விவரம்: சாகுபடி நில உடைமைக்கான சான்றிதழ்களான சிட்டா நகல், அடங்கல், ஆதார் அட்டை நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு எண் காட்டும் புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ்,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் உரிய படிவத்தில் மற்றும் முன்மொழிவுப் படிவம் ஆகியன இணைக்கப்பட வேண்டும்.
நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களை பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில் இணைத்துக் கொள்ள மத்திய அரசின் பொது சேவை மையம் திருச்செங்கோடு- 9894258434 மற்றும் குமாரமங்கலம் - 9842917178 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூரில்...
பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பரமத்தி வட்டாரத்தில் நிகழ் சம்பா பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், கூடச்சேரி, பில்லூர், நடந்தை, ஆரியூர்பட்டி, மேல்சாத்தம்பூர், சித்தம்பூண்டி,வேலூர் புஞ்சை இடையார் மேல்முகம் ஆகிய வருவாய் கிராமங்களில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
ஏக்கர் ஒன்றுக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 29 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான பிரீமியத் தொகையாக ரூ. 435 செலுத்த வேண்டும். இந்த பிரீமியத் தொகையை விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுச் சேவை மையங்களில் செலுத்தலாம்.
விதைப்பு செய்ய முடியாத இனத்துக்கு நவம்பர் 16-ஆம் தேதியும், பயிர் இழப்பீடு காப்பீடுக்கு நவம்பர் 30-ஆம் தேதியும் இறுதி நாளாகும். மேலும் விவரங்கள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com