மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கார்த்திகைத் தீபத் திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கார்த்திகைத் தீபத் திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது.
திருக்கோயில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த கும்ப பூஜையில் கலசத்தில் நிரப்பப்பட்ட புனித நீருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
கம்பத்தடி மண்டபம் முன்பு காலை 9.30 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் எழுந்தருளி அருள்பாலித்தனர். கொடிமரத்தில் லிங்கம், காளை உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளைக் கொடி கட்டப்பட்டது. பின்னர் கொடிமரத்தின் நான்கு பக்கத்திலும் தர்ப்பைப் புற்கள் கட்டப்பட்டன.
வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்துக்கான பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 10.30 மணிக்கு கார்த்திகைத் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொடியேற்றத்துக்குப் பின்னர் சுவாமி, அம்மன் திருக்கோயில் சன்னதிப் பிரகாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கார்த்திகைத் திருநாள் வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அன்று திருக்கோயில் பொற்றாமரைக்குளம், சுவாமி, அம்மன் சன்னதிகளில் தீபம் ஏற்றப்படுவதுடன், கீழமாசி வீதியில் சொக்கப்பான் கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com