4 மாதங்களுக்கு மேலாக ஊதியம் பெறாத பல்கலை. தினக்கூலி ஊழியர்கள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தினக்கூலி ஊழியர்கள் பலர் 4 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தினக்கூலி ஊழியர்கள் பலர் 4 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
காமராஜர் பல்கலைக் கழகத்தில் தினக்கூலி ஊழியர்கள் பல பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். தினக்கூலி ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக இருப்பதால் அவர்களை பணியில் நீடிக்கச் செய்வதா, வேண்டாமா என்பது குறித்தப் பரிசீலனை நடந்துவருகிறது.
பல்கலைக்கழக நிதி நிலையைக் கருத்தில் கொண்டு தினக்கூலி பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இந்தநிலையில், தினக்கூலி பணியாளர்களில் சுமார் 90 பேருக்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஊதியமின்றி பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவற்றுக்காக பல்கலைக் கழகத்துக்கு வருவோரிடம் பணம் பெறும் கட்டாயம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கு.ஆறுமுகம் கூறியது: தினக்கூலி ஊழியர்கள் பணிக்காலத்துக்கு உரிய ஊதியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வாகனத் திருட்டு: காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாள்களில் இருசக்கர வாகனங்கள் அதிகம் திருட்டு போவதாக புகார் எழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வாகனத் திருட்டு சம்பந்தமான காட்சிகள் குறித்து ஆராய காவல்துறை சார்பில் முயற்சித்தபோது பல கேமராக்கள் செயல்படாதது தெரியவந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com