தனியார் ஐடிஐ அங்கீகாரம் பெற இணைய தளத்தில் விண்ணப்பம்

தனியார் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் பெறுவது, அங்கீகார நீட்டிப்பு ஆகியவற்றுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் பெறுவது, அங்கீகார நீட்டிப்பு ஆகியவற்றுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகள் துவங்குவதற்கு அங்கீகாரம் வழங்குவது, ஏற்கெனவே செயல்படும் பயிற்சிப் பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு அளிப்பது ஆகியவற்றுக்கு வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.2 முதல் ஏப்.30 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள பயிற்சி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பின்னர் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் மற்றும் அங்கீகார நீட்டிப்புக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகவே, தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகள் அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் நீட்டிப்புக்கு ஏப்.30 ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com