டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது: ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
 கடந்த அக்டோபர்,  நவம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க அதிகமாக இருந்தது. அக்டோபரில் 1268 பேரும்,  நவம்பரில் 1385 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், முந்தைய மாதங்களை ஒப்பிடும்போது டிசம்பரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
 குறிப்பாக அக்டோபர் கடைசி வாரத்தில் எந்த நேரத்தில் கணக்கெடுப்பு செய்யும்போதும்,  24 மணி நேரத்தில் அனைத்து மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 180 இருந்தது. தற்போது 43 ஆகக் குறைந்திருக்கிறது.
 வரும் நாள்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மேலும் குறைக்கப்படும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுப்பது குறித்து மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  பொதுசுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தொடர் நடவடிக்கையால் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com