மதுரையில் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் உள்பட 3 பேர் கைது: 10 டன் அரிசி பறிமுதல்

மதுரை அருகே ரேஷன் அரிசி பதுக்கிய பெண் உள்பட மூவரை உணவுப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து , 10 டன் எடையுள்ள அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை அருகே ரேஷன் அரிசி பதுக்கிய பெண் உள்பட மூவரை உணவுப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து , 10 டன் எடையுள்ள அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்தபுரம் வெங்கடாச்சலபுரம் பகுதியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கி உள்ளது. இங்கிருந்து வாகனங்கள் மூலம் மதுரையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், கிட்டங்கியில் ரேஷன் பொருள்களை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட வாகனங்கள் மதுரை அருகே உள்ள கல்மேடு பகுதியில் உள்ள அரிசி ஆலைக்கு செல்வதாக மதுரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் போலீஸார் புதன்கிழமை மாலை கல்மேடு பகுதியில் உள்ள அரிசி ஆலையில் சோதனை நடத்தினர். அப்போது ஆலையில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய 160 மூடை பச்சரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆலை உரிமையாளர் சேது காளி, மற்றும் ஊழியர் சௌந்தரபாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் சேதுகாளி சொந்தமாக இரு லாரிகள் வைத்திருப்பதும்,  அதன்மூலம் வாணிபக்கழக கிட்டங்கியில் இருந்து ரேஷன் பொருள்களை ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லும் ஒப்பந்தம் எடுத்திருப்பதும் தெரிய வந்தது. அதன்மூலம் ரேஷன் கடைகளுக்கு செல்லவேண்டிய அரிசி மூடைகளை தனது அரிசி ஆலைக்கு எடுத்துச் சென்று பாலிஸ் செய்து வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பது தெரிய வந்தது. 
இதையடுத்து ஆலையில் பதுக்கியிருந்த 10 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர் சேது காளி, ஊழியர் சௌந்தரபாண்டி, கடத்தலுக்கு உடந்தையாக இருந்து ரேஷன்கடை ஊழியர் ரவிச்சந்திரன் மூவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com