வெளிநாடு வரும் தமிழ் இலக்கியவாதிகள் கட்டாயப்படுத்தி பணம் கேட்கிறார்களே! மலேசியத் தமிழ்மணி மன்ற தேசியத் தலைவர் ஆதங்கம்

தமிழகத்திலிருந்து மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிக்கு வரும் இலக்கியவாதிகள் கட்டாயப்படுத்தி பணம் கேட்பது வேதனையாக உள்ளது என

தமிழகத்திலிருந்து மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிக்கு வரும் இலக்கியவாதிகள் கட்டாயப்படுத்தி பணம் கேட்பது வேதனையாக உள்ளது என மலேசியத் தமிழ்மணிமன்ற தேசியத் தலைவர் சு.வை.லிங்கம் கூறினார்.
 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறை, தமிழியற்புலம் மற்றும் மலேசியத் தமிழ்மணிமன்றம், திருமூர்த்திமலை தென்கலைத் தமிழ்ச்சங்கம் சார்பில் உலகளாவிய தமிழ்ச் சிறுகதைகள் நூற்றாண்டு விழா, நூல் வெளியீடு, சிறுகதைப் போட்டி பரிசளிப்பு,  முதுபெரும் படைப்பாளருக்கு விருது,  பாராட்டு ஆகிய ஐம்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
  விழாவில் முதல் சிறுகதைத் தொகுப்புகள் அடங்கிய நூலை வெளியிட்டு சு.வை. லிங்கம் பேசியதாவது:
  எழுத்தாளர்களை பாராட்டுவது முக்கியமானதாகும். தமிழ்க் கடவுளான முருகன் கோயில்களில் தமிழ் படைப்பாளர்கள் கெளரவிக்கப்படவேண்டும்.  திரைப்படங்களில் சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட  தமிழில் மிகப்பெரும் எழுத்தாளருக்கு கிடைப்பதில்லை.  தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாகவே திரைப்படங்களில் பெண்கள் ஆபாசமாக உடையணிந்து வந்தாலும்,  அவர்களுக்கு மரியாதை தரும் நிலையே உள்ளது.
  தமிழ் கலாசார சீரழிவை எதிர்த்து படைப்பாளர்கள் செயல்படுவது அவசியமாகிறது. மலேசியாவில் புகை, மதுவுக்கு எதிரான பிரசாரம் தமிழர்களால் நடத்தப்பட்டு வருகிறது. சங்க இலக்கிய ஆய்வோடு நின்றுவிடாமல்,  நவீன தமிழ் இலக்கியவாதிகளை ஆராய்ந்து எழுதும் போக்கு வளரவேண்டும்.
  தமிழகத்திலிருந்து மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு வரும் இலக்கியவாதிகள் கட்டாயப்படுத்தி பணம் கேட்பதை வாடிக்கையாக கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.  தமிழக படைப்பாளிகளை பாராட்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் அழைத்தாலும் பணம் தந்தால்தான் வருவோம் என்கிறார்கள். 
 மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல. கூலித் தொழில் புரிந்து தமிழைக் காக்கும் வகையில் மன்றம் அமைத்து செயல்படுகிறார்கள்.  செல்வத்தில் வறியவர்களாக மலேசியத் தமிழர்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியத்தில் அவர்கள் சிந்தனைமிக்கவர்களாக உள்ளனர்.
  தமிழகத்தில் உழவர் பின்னால் அனைவரும் சென்ற நிலை மாறிவிட்டது.  நவநாகரீக உடையணிந்தவர்கள் பின்னாலே நாம் செல்லும் நிலையில் உள்ளோம். எனவே பண்பாடு காக்கப்படவேண்டியது அவசியம் என்றார்.
 நிகழ்ச்சியில் நாலாயிரத் திவ்யபிரபந்தம் தொகுப்பு நூல்கள் காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.  மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் 
பி.பி.செல்லத்துரை, காவல் உதவி ஆணையர் ஆ.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் சண்முக. திருக்குமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com