"சீனப்பொருள்களை புறக்கணிக்க வேண்டும்'

இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் இளங்குமார்சம்பத் கூறினார்.

இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் இளங்குமார்சம்பத் கூறினார்.
 மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குருபூஜை விழாவுக்கு  டாக்டர் பாலமுருகன் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் இளங்குமார்சம்பத் பேசியதாவது:
   இந்தியாவை அண்டை நாடான சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. ஆனால்,  நம் நாட்டில் சீனப் பொருள்களே அதிகமாக விற்கப்படுகிறது.  
  இதனால் சீனப் பொருளாதாரம் மேம்படுகிறது. ஆகவே அந்த நாட்டின் பொருள்களை நாம் புறக்கணிக்க வேண்டியது அவசியம். அதே சமயத்தில் நமது நாட்டு தயாரிப்பு பொருள்களை வாங்க வேண்டும் என்றார்.
    முன்னதாக தணிக்கையாளர் வி.கே.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு வணக்கம் செலுத்தும் பூஜைகள் நடைபெற்றன.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நகர்த் தலைவர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.  அமைப்பின் மாநகரச் செயலர் எம்.எச்.கிருஷ்ணன் வரவேற்றார்.  நிர்வாகி ராஜசேகர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com