தேக்வாண்டோ கின்னஸ் சாதனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

தேக்வாண்டோ கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை மாணவர்களுக்கு சாதனைச் சான்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

தேக்வாண்டோ கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை மாணவர்களுக்கு சாதனைச் சான்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
  தேசிய அளவில் தேக்வாண்டோ பயிற்சியில் உலக சாதனை நிகழ்த்துவதற்காக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி  6 இடங்களில் பூம்சே எனும் தேக்வாண்டோ பயிற்சி நடைபெற்றது.  மதுரை கோச்சடையில் உள்ள குயின்மீரா சர்வதேசப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்றனர்.
 கடந்த 2016 ஆம் ஆண்டு தேக்வாண்டோ பயிற்சியில் ஒரு மணி நேரத்தில் அதிகமானோர் கையை மடக்கி நீட்டி செய்த பயிற்சி எண்ணிக்கையை விட,  கடந்த ஏப்ரலில் 1,600 பேர் சேர்ந்து மேற்கொண்ட பயிற்சியில் 58,683 முறை மடக்கி நீட்டி சாதனை படைக்கப்பட்டது.     இப்பயிற்சியை கின்னஸ் சாதனைப் புத்தக குழுவினர் ஏற்று அதற்கான சான்றிதழ்களை தற்போது வழங்கியுள்ளனர்.  இதையடுத்து மதுரையில் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு கின்னஸ் சாதனை சான்றுகளை வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு மதுரை தேக்வாண்டோ கழகத் தலைவர் சுமதி தலைமை வகித்தார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாதனை சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
  நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன்,  ஒலிம்பிக் சங்க தமிழக துணைத் தலைவர் சோலை எம்.ராஜா,  தேக்வாண்டோ கிராண்ட் மாஸ்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெயந்த்ரெட்டி,  குயின்மீரா சர்வதேசப் பள்ளி இயக்குநர் கவிஞர் அபிநாத் மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் உள்ளிட்டோர் சாதனையை பாராட்டினர்.    இதில் தேக்வாண்டோ கழக மதுரை மாவட்டச் செயலர் பிரேம்நாத்,  சாதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நாராயணன்,  ஹைதராபாத் தேக்வாண்டோ வீரர்கள் கஜேந்திரகுமார்,  கலீல்,  டால்ஃபின் பள்ளி தாளாளர் கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com