மதுரையில் இருந்து புறப்படும் மதுரை- டேராடூன்/சண்டிகர் விரைவு ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வண்டி எண்.12687, மதுரை-டேராடூன்/சண்டிகர் (வாரம் இருமுறை) விரைவு ரயில் மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) இரவு 11.35 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இதன் இணைப்பு ரயில் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை பகல் 1.15 மணிக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.