காமராஜர் பல்கலை. இளநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள்

மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளநிலைப் பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை ஏப்ரல் 2017 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளநிலைப் பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை ஏப்ரல் 2017 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக் கழக தேர்வாணையர் சு. ஆண்டியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  மதுரை காமராஜர் பல்கலைக் கழக இளநிலை பட்டப்படிப்பு பருவமுறை ஏப்ரல் 2017-க்கான பி.பி.ஏ., பி.காம். ஆகியவற்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை பல்கலைக் கழக இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.  மேலும்,  இரு பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மதிப்பெண் பட்டியல் வரும்வரை காத்திராமல்,  விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டுக்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூலை 27 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக் கழக தேர்வாணையர் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை "எஸ்பிஐ ஆன்லைன் பேமென்ட்'  மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.  கேட்பு வரைவோலை மற்றும் எஸ்பிஐ சலான் ஏற்கப்பட மாட்டாது.
தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதுடன், செலுத்திய பணமும் திருப்பித்தரப்பட மாட்டாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com