தனியார் நிதி நிறுவன மோசடி தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு

மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை:  மதுரை பைபாஸ் சாலையில் ஏபிஎஸ் அக்ரோடெக் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம்  அதிக வட்டி தருவதாகக் கூறி  பல கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஏ.செந்தில்வேலு, ஏ.செல்வக்குமார், உமா, பாண்டியராணி, தாமோதரன், அருண்குமார், பாபுஜி, ஆவுடையப்பன், சுந்தரலிங்கம், இசக்கி, முத்துக்குமார்  ஆகியோர் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்து பண வசூல் செய்து வந்தது தெரிய வந்தது.
 இதையடுத்து நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும், அந்நிறுவனத்தின் மீதும் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் விஸ்வநாதபுரத்தில் கதவுஎண் 39-இல் இயங்கி வரும் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் தெரிவிக்கலாம்.
ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாத நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.  ஆண்டுக்கு 12.5 சதவீதத்தை விட கூடுதலாக வட்டி தருவதாகக் கூறும்  நிறுவனங்கள் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com