கோவை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையில்

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்தின் மீது சனிக்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும், கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மதுரை தெற்குவாசல் மார்க்கெட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு செயலர் எஸ்.எம். சாமி தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள்  உறுப்பினர் இரா. அண்ணாதுரை தொடக்கி வைத்துப் பேசும்போது,
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறினார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி நடந்தது. தற்போது கோவையில் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிப்பட்டுள்ளது.  மக்களுக்காக போராடும் கட்சியின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டின் இறையாண்மை, மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் அமைப்புகள் மீது அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன் நிர்வாகிகள் இரா.ஜோதிராம், இ.எம்.ஜோசப், வி.பிச்சை, பி.ராதா, மா.கணேசன், மா.செல்லம் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com