தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்று பாஜகதான்: தமிழிசை

தமிழகத்தில் அதிமுகவிற்கு மாற்று பாரதிய ஜனதா கட்சிதான் என்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.

தமிழகத்தில் அதிமுகவிற்கு மாற்று பாரதிய ஜனதா கட்சிதான் என்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.
சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாக உள்ளது. எதிர்க்கட்சியினர் அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்கின்றனர். ஆனால், ஊழல், முறைகேடுகள் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. இன்றைய சூழலில் தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக பாஜக உள்ளது.
இன்னும் 3 மாதத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக மாறும். 10 ஆயிரம் முழு நேர நிர்வாகிகள் பாஜகவின் வளர்ச்சிக்கு பாடுபடுகின்றனர். அதிமுகவிற்கு மாற்று திமுக இல்லை பாஜகதான்.
நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். ஆனால், அவர் தனது முடிவை அறிவிக்காத நிலையில், அதுகுறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com