பார்வையற்றோர் பங்கேற்ற கார் பேரணி

இந்திய பார்வையற்றோர் சங்கமும், மதுரை லேடீஸ் சர்க்கிள் அமைப்பும் இணைந்து பார்வையற்றோர் பங்கேற்ற கார் பேரணியை மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இந்திய பார்வையற்றோர் சங்கமும், மதுரை லேடீஸ் சர்க்கிள் அமைப்பும் இணைந்து பார்வையற்றோர் பங்கேற்ற கார் பேரணியை மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
மதுரை பாண்டியன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான இன்சைட் கார் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. பேரணியை மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஜெயந்தி தொடக்கிவைத்தார்.
இந்தப் பேரணியில் பார்வையற்றோர் ஒருவர் காரில் துணை ஓட்டுநராக செயலாற்றி, பிரெய்ல் முறையில் வழங்கப்பட்ட வரைபடத்தை வைத்து ஓட்டுநருக்கு வழிகாட்ட வேண்டும். பார்வையற்றோர் கூறும் வழியின்படி காரை இயக்கி முதலில் வருபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட பார்வையற்றோர் பங்கேற்றனர்.
இந்தப் போட்டிகள் மூலம் திரட்டப்படும் நிதி பார்வையற்றோர்கள் கல்விக்கு பயன்படுத்தப்படும் என்று இரு அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com