மாநகராட்சி மருத்துவமனைகளில் வயிற்றுப் போக்குத் தடுப்பு முகாம்

மதுரை மாநகராட்சி மருத்துவமனைகளில் வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை நடைபெறும் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மதுரை மாநகராட்சி மருத்துவமனைகளில் வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை நடைபெறும் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
 மாநில அளவில் குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் திங்கள்கிழமை முதல் வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது. முகாமில் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல், சிங்க் (துத்தநாக) மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
 முகாமை முனிச்சாலை மகப்பேறு மருத்துவமனையில் ஆணையர் ஆனீஷ்சேகர் தொடங்கிவைத்துக் கூறியது: மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் வயிற்றுப் போக்கு தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடி பணியாளர்களும், செவிலியர்களும் வீடு வீடாகச் சென்று எடை குறைவான குழந்தைகளை கண்டறிந்து மாத்திரைகளை வழங்குவர். மதுரை மாநகராட்சிப் பகுதியில் முகாம்கள் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.  முகாமில் நகர் நல உதவி அலுவலர் டாக்டர் கே.பார்த்திபன், செயற்பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com