கருவேல மரங்களை அழிக்க மக்கள் முன்வர வேண்டும்: ஆட்சியர்

தண்ணீரை சேமிக்க சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்தார்.

தண்ணீரை சேமிக்க சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்தார்.
அவனியாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அவர் மேலும் பேசியதாவது:   இன்று உலக தண்ணீர் தினம். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சேமிக்க வேண்டும். இதற்கு இடையூறாக உள்ள கருவேல மரங்களை ஒழிக்க மக்கள் முன் வரவேண்டும்.
மேலும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பார்த்தீனியச் செடிகளையும் அகற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைத்து, மழைநீரை சேமிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், விதவைகள், முதியோர் உதவித் தொகை, தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு நீர் தெளிப்பான் கருவி, பட்டா மாறுதல், இலவச பட்டா என மொத்தம் 421 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இதில், மதுரை தெற்கு வட்டாட்சியர் முருகையன், வருவாய் ஆய்வாளர் முரளிதரன், கிராம நிர்வாக அலுவலர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்:  உலக தண்ணீர் தினத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு, ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகசெல்வி தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார்.
திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள், தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, திருநகர் பகுதி முழுவதும் பேரணியாகச் சென்றனர். இதில், திருப்பரங்குன்றம் துணை வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் பள்ளி ஆசிரயர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com