11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: மாணவிகள் வரவேற்பு

பதினோராம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது வரவேற்புக்குரியது என்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பதினோராம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது வரவேற்புக்குரியது என்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சு.வைசாலி, மேலூர்: பெரு ம்பாலான பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிலேயே பிளஸ் 2 பாடத்தையே படிக்க வைக்கின்றனர். அறிவியல் பாடங்களில் அடிப்படை நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது. அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய பிளஸ் 2 பாடத்தில் புரிதல் இல்லாமலேயே படிக்க வேண்டியுள்ளது. ஆகவே, 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்துவது வரவேற்புக்குரியது.
ப.பவித்ரா, வாடிப்பட்டி: தரவரிசையின்றி தேர்வு முடிவு வெளியிட்டிருப்பது மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதைத் தடுக்கும். இந்த ஆண்டு முதல் 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்துவது மகிழச்சியாக இருக்கிறது.
 பத்தாம் வகுப்பில் கடுமையாகப் படித்துவிட்டு, 11 ஆம் வகுப்பு தேர்வை சாதாரணமாக எதிர்கொள்வதாக இருந்தது. 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்துவது, பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
ஜோ.தனலட்சுமி, வாடிப்பட்டி: 11 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறையால் பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நேரத்தில் ஏற்படும் அச்சம் தவிர்க்கப்பட்டு தைரியமாக தேர்வை எதிர்கொள்ள முடியும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். ரேங்க் முறை நீக்கப்பட்டுள்ளதால், சக நண்பர்களைப் போட்டியாளராகக் கருதும் மனப்பான்மை நீங்கும். ரேங்க் எடுக்க முடியவில்லையே என்று விபரீத முடிவுகளை தேடமாட்டார்கள்.
ஜனஸ்ரீ, கள்ளிக்குடி சத்திரம்: பிளஸ் 2 மதிப்பெண்ணை மட்டுமே வைத்து சில பள்ளிகள் செயல்படுகின்றன. 11 ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்காமல் விடுவதால், கல்லூரிக் கல்வியிலும், போட்டித் தேர்வுகளிலும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். 11 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு நன்மையே.
சுஜிதா, கே.சென்னம்பட்டி: 11-ஆம் வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தினால் பதற்றமான மனநிலையில் மூன்றாண்டுகளும் இருக்கு வேண்டும். பள்ளிகளில் அந்தந்த வகுப்புகளில் உரிய பாடத்தை நடத்த அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கலாம். பொதுத் தேர்வை தவிர்த்தால் மனஅழுத்தத்திலிருந்து  மாணவர்களைப் பாதுகாக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com