பிரம்மாகுமாரிகளின் ஆன்மிகத் திருவிழா: மதுரையில் நாளை தொடக்கம்

பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலய அமைப்பின் 80 ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை (நவ.16) மதுரை தமுக்கம் மைதானத்தில்

பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலய அமைப்பின் 80 ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை (நவ.16) மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் 3 நாள்கள் இலவச மருத்துவமுகாம் நடைபெறுகிறது.
 இதுகுறித்து அமைப்பின் மவுண்ட்அபு தலைமை நிலைய கல்விப்பிரிவு இயக்குநர் பி.கே.பாண்டியமணி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
பிரம்மா குமாரிகள் அமைப்பின் ஆன்மிக சேவையை மக்கள் அறியவேண்டும் என்ற நோக்கில் மதுரையில் வியாழக்கிழமை (நவ.16) முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.19) வரைஆன்மிகத் திருவிழா நடைபெறுகிறது.
 முன்னதாக புதன்கிழமை (நவ.15) காலையில் ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் முன்பிருந்து மினிமாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடக்கிவைக்கிறார். காவல் துணை ஆணையர் வீ.ஈஸ்வரன், பாரத ஸ்டேட் வங்கி மண்ட மேலாளர் பாலாஜி ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆண்களுக்கு ஊமச்சிகுளம் வரை 10 கிலோ மீட்டரும், பெண்களுக்குஅய்யர்பங்களாக சர்ச் வரை 5 கிலோ மீட்டரும் மாரத்தான் நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 வியாழக்கிழமை காலை தமுக்கம் மைதானத்தில் ஆன்மிகத் திருவிழா அரங்குகள் திறக்கப்படுகின்றன. இதில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி துணை ஆணையர் பி.மணிவண்ணன், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் (பொறுப்பு) டி.மருதுபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 நாளைய பொன்னான பாரதம், பிரமிட் தியான அறை, ஆன்மிக அறிவியல் அரங்கம், முப்பரிமாண தியானக் கூடம், ரத்த, மன அழுத்தத்தை அளவிடும் சாதனம், புதிர் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், பண்பு சார்ந்த விளையாட்டுகள் என உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஜோதிர்லிங்க தரிசனம், தேவியர்தரிசனம் ஆகியவை தத்ரூபமாக இருக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
3 நாள்கள் இலவச மருத்துவ முகாம்:  வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு பொது மருத்துவம், சர்க்கரை மற்றும் கண் சிகிச்சைக்கானஇலவசபரிசோதனை  முகாம்கள் நடைபெறுகின்றன. ஆன்மிகத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
 மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மண்டல பிரம்மாகுமாரிகள் அமைப்பின் இயக்குநர் சந்தோஷ்தீதிஜி ஆசியுரை வழங்குகிறார். அமைப்பின் மதுரை மண்டல துணை இயக்குநர் மீனாட்சி வாழ்த்துரை வழங்க, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், தென்மண்டல காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார்.
 பேட்டியின் போது பிரம்மாகுமாரிகள் அமைப்பின் தியான ஆசிரியைகள் பி.கே.செந்தாமரை, ஆஷா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com