மதுரை பள்ளி மாணவ, மாணவியர் தேசிய நீச்சல் போட்டிக்குத் தேர்வு

தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 5 பேர் தேர்வாகியுள்ளனர்.

தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 5 பேர் தேர்வாகியுள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட நீச்சல் கழகச் செயலர் கண்ணன் கூறியதாவது: இந்திய பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் வரும் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறுகிறது.  இதில் பங்கேற்போருக்கான தகுதிப் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மதுரை மாணவர்களில் 5 பேர் தேசிய போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மகாத்மா பள்ளி மாணவர் செல்வப் பிரசன்னா 50மீட்டர், 100 மீட்டர் ப்ரீஸ்டைலில் முதலிடம் வகித்துள்ளார்.  லீ சாட்லியர் பள்ளி மாணவர் விகாஷ் 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் ப்ரீஸ்டைல், பட்டர் ப்ளை ஆகியவற்றில் முதலிடமும், 100 மீட்டர் ப்ரீஸ்டைலில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.
 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மகாத்மா பள்ளி மாணவர் அன்புக்கதிர் 100 மீட்டர் ப்ரீஸ்ட்ரோக்,  50 மீட்டர் ப்ரீஸ்ட்ரோக் ஆகியவற்றில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பிரிவில் மாணவர் பிரவீன்குமார் 50 மீட்டர், 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டிகளில் முதலிடம் பெற்றார். 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் ஜெயின்வித்யாலயா மாணவி பிரியங்கா 50 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார் என்றார்.
குடியரசு தின விளையாட்டு: பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான  நீச்சல் போட்டி விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற எஸ்பிஓஏ பள்ளி மாணவர் பி.எல்.சித்தார்த் 400 மீட்டர் ஐஎம் பிரிவில் மூன்றாமிடம் பெற்றார். ரேஸ்கோர்ஸ் மைதான நீச்சல்குளத்தில் பயிற்சி பெற்ற மகாத்மா பள்ளி மாணவர் ஹரீஸ்பாண்டியன் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில்  200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்கில் மூன்றாமிடம்,  மாணவர் அன்புகதிர் 50 மீ, 100 மீ பிரிவில் பேக்ஸ்ட்ரோக்கில் மூன்றாமிடம், மாணவர் பிரவீன்குமார் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்கில் மூன்றாமிடம் பிடித்தனர். மாணவி பிரியங்கா 50 பட்டர்பிளையில் முதலிடமும்,  200 ஐஎம் பிரிவில் முதலிடமும் பெற்றார்.
ஜெயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி மாணவி ஸ்ரீநிதி கிருஷ்ணா 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 100 மீட்டரில் இரண்டாமிடமும், 400 மீட்டர் ஐஎம் பிரிவில் மூன்றாமிடமும் வகித்தார்.  ஸ்ரீ ராம் மெட்ரிக். மகளிர் பள்ளி மாணவியர் சுதா, சரண்யா, கோகிலவாணி, காயத்திரி, சினேகாப்ரியா ஆகியோர்  மெட்லி ரிலேயில் மூன்றாமிடமும் வகித்தனர். போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ப்ரீஸ்டைல், மெட்ரிலே போட்டிகளில் ஸ்ரீராம் நல்லமணி யாதவா  பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் விஜிதா, உத்தரவள்ளி, லலிதபிரபா, ஸ்வதா ஆகியோர் மூன்றாமிடம் வகித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com