கொசு ஒழிப்பு பணி: பொதுமக்கள் ஒத்துழைக்க அமைச்சர் வேண்டுகோள்

கொசு ஒழிப்புப் பணியில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார்.

கொசு ஒழிப்புப் பணியில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார்.
 மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட சோலையழகுபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாமை வியாழக்கிழமை தொடக்கி வைத்து, அவர் பேசியது:
 டெங்கு காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால், டெங்கு காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்த முடியும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இருக்கின்றன.
  டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது முக்கியப் பணியாக இருக்கிறது.  கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவரவர் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பது அவசியம். இதில் கவனக்குறைவு ஏற்படும் நிலையில் தான் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிவிடுகிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் சாணத்தை கரைத்து தெளிப்பார்கள். இது சிறந்த கிருமி நாசினியாகும். இதேபோல, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருள்களை அகற்றி சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும் என்றார்.
 மாவட்ட  ஆட்சியர் கொ.வீரராகவராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர், மதுரை கோட்டாட்சியர் கார்த்திகேயன்,  மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இந்த முகாமையொட்டி பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர்  வழங்கப்பட்டது. சோலையழகுபுரம் பகுதியில் உள்ள சில வீடுகளில் ஆய்வு செய்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com