காமராஜர் பல்கலை.யில் நாளை தொலைநிலைக்கல்வி குறைதீர் முகாம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விப் பிரிவின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விப் பிரிவின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விப் பிரிவு இயக்குநர் (பொ) பேராசிரியர் வி.கலைச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரைகாமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விப் பிரிவு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வரும் 16 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை தொடங்குகிறது.
காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இம்முகாம் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
பல்கலைக்கழக வளாக கருத்தரங்கக் கூடத்தில் நடைபெறும் முகாமில் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை நேரடியாக மாணவர்களிடமிருந்து குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களையும் பெறுகிறார். ஆகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவ, மாணவியர் தங்கள் தேவைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
துணைவேந்தராக பி.பி.செல்லத்துரை பொறுப்பேற்றபின்பு தொலைநிலைக் கல்விப் பிரிவு மாணவர்களின் குறைதீர்க்கும் முகாமானது மாதந்தோறும் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com